Breaking
Thu. Dec 26th, 2024

விழுப்புரம் மாவட்டம் கூனிமேட்டில் உள்ள பள்ளிவாசலில் புகுந்து லட்சுமி போட்டோ வைத்து பூஜை நடத்தியுள்ளான். இவன் திருக்குர்ஆன் பாகங்களை கிழித்தெறிந்துள்ளான். பெங்ளூரிலிருந்து வந்திருக்கும் தப்லீக் ஜமாஅத் உறங்கிக் கொண்டிருந்தப் போது அவர்களை குச்சியால் அடித்துள்ளான்.

பதறிய அவர்கள் நண்பர்களுக்கு தகவல் சொல்ல ஓடிய இவனை விரட்டி பிடித்துள்ளனர். எனக்கு ஒரு படையே இருக்கின்றது. என் மீது கை வைத்தால் நடப்பது வேறு என்று மிரட்டியுள்ளான்.

இவனுடைய கீழாடை ஆடையை கழற்றி பார்க்கும் போது இவன் சுன்னத் செய்யப்பட்டுள்ளான். நண்பர்களின் மிரட்டலுக்கு பிறகு தான் உத்தரப் பிரதேசம் என்றும் முஸ்லீம் என்றும் கூறியுள்ளான். முஸ்லீம் என்றால் கலிமாவைச் சொல் என்ற போது தெரியாது என்று சொல்லியுள்ளான்.

மரக்காணம் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததும் அவர்கள் இழுத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். மரக்காணத்தில் பள்ளி வாசலிலும் இதே காரியத்தை செய்துள்ளான் என அங்குள்ள முஸ்லீம்கள் கூறுகின்றனர்.

இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்ற கூட்டம் இன்று சுன்னத் செய்து கொண்டு இப்படி பட்ட காரியத்தில் இறங்கியுள்ளனரா? என்ற சந்தேகம் எழுகிறது.

Related Post