Breaking
Sun. Dec 22nd, 2024

(அஷ்ஷேக் பௌசுல் அமீர்(அல் முஅய்யிதீ)

இலங்கையில் நூற்றுக் கணக்கான பள்ளிவாயில்கள் இவ்வருட ரமழானுக்கு பிறகு நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற விடயம் உங்களுக்குத் தெரியுமா???

இல்லை…

அது புதிதாக நிர்மாணிக்கப்பட்டதல்ல…
புனித ரமழான் வரை இமாம்கள் சேவை புரிந்த பள்ளிவாயில்கள்தான் அவை…

நடந்தது இதுதான்?

சேவை புரிந்த இமாம்கள் ஷவ்வால் தலைப் பிறை கண்டு பெருநாளைக்காக வீடு சென்றவர்கள் திரும்பி வரவேயில்லை!

காரணம் என்ன தெரியுமா?
இதோ ஒரு இமாம் கூறுகிறார் கேளுங்கள்…

நான் கடந்த சில வருடங்களாக ஒரு பள்ளிவாயிலில் இமாமாக கடமை செய்தேன்.
ஐந்துவேலை தொழுகை,மாதத்தில் இரண்டு குத்பாக்கள்,யாரும் குத்பாவுக்கு வராத நேரத்திலும் குத்பா,ஊரிலுள்ள நலவு,நஷ்டங்கள் எல்லாவற்றிலும் எனக்கு சுமத்தப்பட்ட பொறுப்பாக செய்து வந்தேன்.ஆனாலும் எனக்கு அவர்கள் கொடுத்த மாத ஹதியா வெறும் 15,000/= மட்டும்தான்…

பிரதி மாதமும் வரவுக்கு மிஞ்சிய செலவாக தலா 5,000/=ரூபாய்கள் கடனாளியாகினேன்.
இன்ஷா அல்லாஹ் ரமழானிலாவது கவனிப்பார்கள் என்று பார்த்தால் எனக்கு அவர்கள் தந்த தராவீஹ்,பெருநாள் தொழுகையின் ஹத்யாக்களை சொல்லவும் வெக்கமாக இருக்கிறது ஹழ்ரத்….

என்று கூறி முடித்ததும்…

அப்போ நீங்க பள்ளிவாயிலுக்கு போகல்லயா?என்று கேட்ட போது ஹழ்ரத் வேறு எங்கயாவது கூலி வேலை செய்து பிழைக்கலாம்.
அந்த பள்ளிவாயில் எனக்கு சரிவராது ஹழ்ரத் என்று கூறி தனது மனக்கவலையை சொன்னார் அந்த இமாம்…

மற்றொருவர் இதோ இப்படி கூறுகிறார்…

தராவீஹ் வரி என்று அறவிட்டதில் சிலதை எனக்கு கொடுத்துவிட்டு அதிகமான தொகையை பள்ளிவாயில் பைதுல்மாலில் சேர்த்துவிட்டார்கள் ஹழ்ரத்!
ஏன் நீங்கள் அவர்களிடம் அவ்வாறு செய்யக்கூடாது என்று சொல்லவில்லையா?என்று கேட்டபோது இவ்வளவு பணத்தை மௌலவிக்கு கொடுப்பதா?என்று வயிற்றெறிச்சலோடு பதில் சொன்னார்கள் ஹழ்ரத்!
நான் தனிமரமாக நின்று நிர்வாகத்தோடு போராடுவதா என்று நினைத்து பெருநாள் தொழுகையோடு நான் கொண்டு போன கை உறையுடன் வீடு வந்தேன் என்றார் அவர்….

இப்படி ஏராலம் ஏராலம் அராஜக அடக்குமுறைகளும்,பன்பாடாக நடந்து கொள்ளத் தவறிய நிர்வாகிகளே இன்று புதிய இமாம்களுக்கு வலை வீசுகிறார்கள்.அதுவும் மலிவு விலைக்கு உலமாக்களை தேடுகிறார்கள்…

என்ன ஆச்சரியம்…

இதோ புதிய இமாம் கடமைக்கு சேர்ந்திருக்கிறார் என்று ஜும்ஆ முடிந்தவுடன் ஊர் ஜமாஅத்தினரிடம் தகவல் சொல்லுகிறார்கள்.

நடந்தது இதுதான்…

“இமாம் தேவை”

என்றதோர் விளம்பரம் வட்ஸ்அப்பிலே வந்தது கண்டு,இத்தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.
நன்று சிந்தியுங்கள்…
இதுபோன்றதோர் விளம்பரம் அடுத்த ஷவ்வால் மாதத்திலும் வரலாம்…
ஒருவேலை நீங்களும் இடைநிறுத்தப்படலாம்…
அல்லது விலக நேரிடலாம்…

இதற்கு ஒரு முடிவு கிடைக்காதா???

உலமாக்களுக்கு ஒரு விடிவு கிடைக்காதா???

இன்னுமா இந்த நிர்வாகிகள் உலமாக்களை மிதிக்கிறார்கள்???

ஒற்றுமைப்படுவோம்…

அல்லாஹ்விற்காக, அவனது தீனுக்காக உழைப்போம்…

நமக்கும் அல்லாஹ் நல்ல வசதி வாய்ப்புகளை நல்க பிரார்த்திப்போமாக…

By

Related Post