திருகோணமலை கணேஷ் ஒழுங்கையிலுள்ள பள்ளிவாயலின் பழைய கட்டடத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சுவர் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக உப்பு வெளி பொலிஸார் தெரவித்தனர்.
இன்று காலை(1) இடம்பெற்ற இச் சம்பவத்தில், நவாஸ்- சாஹிபு (23 வயது) என்னும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பள்ளிவாயலில் புதிய கட்டட மொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டடத்தை அகற்றும் பணி இடம்பெற்று வருகிறது. இதன் போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை உப்பு வெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். tm