ஜேர்மனியின் கிழக்கு நகரான ட்ரெஸ்டனில் பள்ளிவாசல் ஒன்றின் மீதும் சர்வதேச மாநாட்டு மையம் ஒன்றின் மீதும் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (26) நடந்த இந்த குண்டு தாக்குதல் சம்பவங்களில் எவரும் காயமடையவில்லை.
இந்த தாக்குதலை நடத்தியதாக இது வரை யாரும் உரிமை கோரவில்லை. எனினும் இனவாதமே இந்த தாக்குதல்களின் நோக்கமாக தெரிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத் தாக்குதலைத் தொடர்ந்து ஜேர்மனியின் ட்ரெஸ்டனில் உள்ள பள்ளிவாசல்களின் முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.