Breaking
Fri. Nov 15th, 2024

இர்ஸாத் ஜமால்

பொத்துவில் கிராம சேவகர் பிரவு -05ல் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பமாஸா பள்ளிவாயல் கடந்த மாதம் 28ம் திகதி தொடக்கம் மூடப்பட்டிருப்பது வாசகர்கள் அறிந்த விடயமாகும்.

குறித்த பள்ளிவாயல் முறையற்ற வகையில் தனக்குச் சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாக கொண்டு  நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டது.

குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் வழக்கை தொடுத்தவரான அக்கறைப்பற்றை பிறப்பிடமாகவும் தலைநகரை அண்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தாஹீர் என்பவருக்கே காணி சொந்தமானது என தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து பள்ளிவாயல் மூடப்பட்டுள்ளது. அதன் திறபுகள் உரியவரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாயல் நிறுவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

பள்ளிவாயலை மீள் திறப்பதற்கு நிருவாகத்தினர் குறித்த நபரை அனுகிய போது அவர் 40 இலட்சம் ரூபாவை கோரியதாக தெரிவித்தனர். பள்ளிவாயல் நிறுவாகத்தினர் 25-30 இலட்சம் வரை தருவதாக கூறியுள்ள போதும் அது தோழ்வியில் முடிவடைந்துள்ளது.

இதனால் மனமுடைந்து போன நிறுவாக சபையினர் பணம் கொடுத்து பள்ளிவாயலை கொல்வனவு செய்வதற்கு பகரமாக மாற்று வழி ஒன்றை கையால எத்தனித்திருப்பதாக மபாஸா பள்ளிவாயலின் தலைவர் எம்.பீ.எம் அபுசாலி தெரிவித்தார்.

குறித்த இலட்சங்ளை மக்களிடம் இருந்து திறட்டி பள்ளிவாயலை விலை கொடுத்து வாங்குவதற்கு பகரமா அப்பிரதேத்தில் புதிய காணி ஒன்றினை கொல்வனவு செய்து அக்காணியில் புதிய பள்ளிவாயலை நிர்மாணிப்பதே அந்த மாற்று வழியாகும்.

எதிர் வரும் ரமழான், ரமழான் மாததின் சிறப்பு இபாதத்துகளை கருத்தில் கொண்டு புதிய பள்ளிவாயலை எதிர் வரும் ரமழானுக்கிடையில் தற்காலிமகா திறப்பதற்கு உத்தேசித்துள்ளனர்.

எனவே சகல மூஸ்லிம்களும் தங்களால் முடிந்த சிறிய உதவியையாவது வழங்குமாறு வேண்டிக்கொண்டார். நீங்கள் ஒரு நாளைக்கு காலை வேலையில் தேணீர் பருகுவதற்கு செலவு செய்யும் பணத்தை பள்ளிவாயல் நிர்மாணிப்பிக்கு தியாகம் செய்யுமாறே தனது வேண்டுகோலில் அவர் குறிப்பிட்டார்.

பொத்துவில் பிரதேச கிராம சேவகர் பிரவு -05 ல் வசிக்கும் மக்கள் பள்ளிவாயல் இன்றி எதிர்நோக்கும் பிரச்சினையை கருத்தில் கொண்டு எம்மாலான உதவிகளை வழங்குவதற்கு முன்வருவோமாக.

குறிப்பு : நாம் இன்று சில இஸ்லாமிய பொதுச்சேவை நிறுவனங்களுடன்தொடர்பினை ஏற்படுத்தி இவ்விடயத்தை தெளிவு படுத்தினோம்.பள்ளிவாயலை விலை கொடுத்து கொல்வனவு செய்வதை விடவும், புதியபள்ளிவாயல் ஒன்றினை நிர்மாணிப்பது நல்லது என அவர்களும்குறிப்பிட்டனர்.

மேலும், நீங்கள் பள்ளிவாயலை நிர்மாணிப்பதற்கான காணியைகொல்வனவு செய்து விட்டு, காணியினது உறுதிப்பத்திரத்துடன் வருங்கள்,நாங்கள் பள்ளிவாயல் நிர்மாணிப்பதற்கான பொருப்பினை ஏற்று,அல்லாஹ்வின் உதவியால் அங்கு பள்ளிவாயலை கட்டித்தருகின்றோம் எனவாக்குறுதி அளித்தனர்.

இச்செய்தியை நாம் மூடப்பட்டிருக்கும் மபாஸா பள்ளிவாயல் நிறுவாத்திடம்எத்திவைத்துள்ளோம்.

 புதிய காணியை அவசரமாக கொள்வனவு செய்ய வேண்டி உள்ளது.அதற்கான நிதி வசூலிப்பை நிறுவாத்தினர் பொத்துவில் பிரதேசத்தில்மேற்கொள்கின்றனர்.

எனவே நல் உள்ளம் கொண்டவர்கள் முதல் கட்டமாக பள்ளிவாயல்நிர்மாணிப்பதற்கு தேவையான காணியை கொல்வனவு செய்வதற்குஉதவுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

பள்ளிவாயலின் வங்கிக்கணக்கு

மபாஸா பள்ளிவாயல்,

மக்கள் வங்கி,

பொத்துவில் கிலை,

வங்கி கணக்கு இலக்கம் :

164-200-19-00-14-534

 பள்ளிவாயல் தலைவர் எம்.பி. எம் அபுசாலி

+9477 80 50 544

Related Post