கூகுள் நிறுவனத்தின் சாரதியற்ற காரொன்று பஸ் ஒன்றுடன் மோதிய சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ளள வீதியொன்றில் பெப்ரவரி 14 ஆம் திகதி இக் கார் சென்றுகொண்டிருந்தபோது பயணிகள் பஸ் ஒன்றுடன் மோதியதாகவும் இவ் விபத்து தொடர்பான சில பொறுப்புட மைகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும் நேற்று முன்தினம் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ஸர்கள், கெமராக்கள் பொருத்தப்பட்டுளள்ள Lexus SUV ரகத்தைச் சேர்ந்த இக் கார், கலிபோர்னியாவின் மவுட் வியூ நகரிலுள்ள கூகுள் தலைமையகத்துக்கு அருகில் வைத்து பஸ் ஒன்றின் பக்கவாட்டில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இந்த கார், மணித்தியாலத்துக்கு 03 கி.மீ. வேகத்திலும் பஸ் ஆனது மணித்தியாலத்துக்கு 24 கிலோமீற்றர் வேகத்திலும் சென்றுகொண்டிருந்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. இவ் விபத்தை யடுத்து தனது சாரதியற்ற கார்களின் கணினி புரோக்கிரம்களை மீளாய்வு செய்தகாவும் கூகுள் தெரிவித்துள்ளது.