தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய இன்று முதல் பஸ் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் பல்வேறு வரிகளின் அதிகரிப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு பஸ் கட்டண உயர்வுக்கு சிபாரிசு செய்யுமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதன் அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் பஸ் கட்டணத்தை ஆறு வீதத்தால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதுவரை காலமும் வழக்கத்தில் இருந்த ஆரம்பக் கட்டணமான எட்டு ரூபா இன்று முதல் ஒன்பது ரூபாவாக அதிகரிக்கின்றது.
12 ரூபா கட்டணத்தில் எதுவித மாற்றமும் இல்லை. ஏனைய கட்டணங்கள் ஆறு வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பயணிகளின் மிகுதிப் பணத்தை வழங்காத பஸ் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.