பஸ் கட்டணத்தை திருத்துமாறு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண அதிகரிப்பு தொடர்பாக தனியார் பஸ்உரிமையாளர்களின் கோரிக்கை சம்பந்தமாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
எனினும் இதன் போது தீர்வு எட்டப்படவில்லை என அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
எனினும் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்திற்கு ஒரு மாத காலவகாசம் பெற்று கொடுப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டண வரையறைகளை புதிதாக தயாரிக்க இவ்வாறு காலவகாசம் பெற்று தருவாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக வரையறைகளை தயாரிக்க போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா, நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.