Breaking
Mon. Dec 23rd, 2024

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவையின் போது, பயணிகள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் 1955 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கோ அல்லது 011-2333222 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உரிய கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடல், பற்றுச்சீட்டு பெற்றுக்கொடுக்காமை, உரிய பாதையில் பயணிக்காது குறுக்கு வீதிகளினூடாகப் பயணித்தல் போன்ற குற்றங்களை, பஸ் நடத்துனர்கள் மேற்கொள்வார்களாயின், அவை தொடர்பில் பயணிகள் முறைப்பாடு செய்யலாம்.

இதேவேளை, ஊர்களுக்குப் பயணிக்கும் மக்கள், குழுக்களாகச் சேர்ந்து பயணிக்க வேண்டுமாயின், அது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

By

Related Post