Breaking
Sun. Dec 22nd, 2024

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பஹ்ரெயின் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பஹ்ரெயினிலுள்ள இலங்கைத் தூதரகத்தினரால் நேற்று பிற்பகல் ரிட்ஸ் கால்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார்.

பஹ்ரெயினில் வாழும் இலங்கை பிரஜைகள் பலரும் இதில் கலந்துக் கொண்டனர். ‘காலங்கடந்தாவது பஹ்ரெயின் அரசுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தமை தமக்கு மகிழ்ச்சியை தருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இங்கு தூதரகம் ஒன்று திறக்கப்பட்டமையினால் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளதாகவும்   ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று பஹ்ரெயின் கலீபாவினால் தமக்கு வழங்கப்பட்ட கௌரவம் உங்களுக்கே என்றும் குறிப்பட்ட ஜனாதிபதி, தமது நாட்டுக்கெதிரான பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் எனவும் அங்கு வாழும் இலங்கையரை கேட்டுக்கொண்டார்.

Bahrain Presents President Rajapaksa with Khalifa Medal (10)வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , ஜனாதிபதியின் செயலாளர்  லலித் வீரதுங்க, கைத்தொழில் மற்றும் வர்த்தக  ரிசாத் பதியுதீன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர்  டிலான் பெரேரா ,தொழிலாளர் மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர்  சரத் வீரசேகர , மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌஸி,மற்றும் பஹ்ரெயினுக்கான இலங்கைத் தூதுவர்  அனுர ராஜகருணா ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Related Post