Breaking
Sun. Dec 22nd, 2024

பாகிஸ்தானை சேர்ந்தவர் அமல் ஜன். சவூதியில் வசித்து வந்த இவர் இந்தோனேசியாவை சேர்ந்த பாம்பாங் சுகியாட்டோ, சூர்யாதி வித்யாஸ்துதி என்ற தம்பதியரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவர்களை இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்து விட்டார்.

இந்த கொலைக்கான நோக்கம் என்ன என்று தெரியவில்லை. இதுதொடர்பான வழக்கில் அமல் ஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரியாத்தில் அமல் ஜன்னின் தலையை துண்டித்து மரண தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி அங்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய பாகிஸ்தானியர் நாசர் அகமது சுல்தான் அகமதுவுக்கும் இதே போன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஜெட்டா நகரில் தலை துண்டிக்கப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.

By

Related Post