Breaking
Mon. Dec 23rd, 2024

பிப்ரவரி 14–ந் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

இது சம்பந்தமாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான கோப்பு உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி உத்தரவு பிறப்பித்து அவர்கள் மூலம் தடை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

By

Related Post