பாகிஸ்தானில் தொடரும் கடும் வெயில் காரணமாக இதுவரை 700 பேருக்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கும் பின்னனியில், மேலதிக உயிர்பலிகளை தடுக்கும் நோக்கில் சிந்த் பிராந்திய அரசாங்கம் இன்று (24) புதன்கிழமை கராச்சியில் பொதுவிடுமுறை அறிவித்திருக்கிறது.
பொதுமக்கள் வெயிலில் வெளியில் உலவாமல் தத்தம் வீடுகளுக்குள் இருந்தபடி தம்மை இந்த வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
தகிக்கும் வெயிலோடு மோசமான மின்வெட்டும் சேர்ந்துகொள்வதால், மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
தற்போது ரமலான் நோன்புக் காலம் என்பதால் முஸ்லீம்கள் நாள் முழுக்க உணவு உண்ணாமலும் நீர் கூட அருந்தாமலும் நோன்பிருந்து வருகிறார்கள்.
இந்த வெயிலுக்கு பலியானவர்களில் பெரும்பான்மையானவர்கள் வயதான முதியவர்கள்.
-BBC-