Breaking
Sun. Mar 16th, 2025

33 நாடுகளுக்கு புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை நியமிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதில் 17 பேர் இராஜதந்திர சேவையில் உள்ளவர்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனையவர்களில் தொழில்சார் நிபுணர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள் அடங்குகின்றனர்.
பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் தயா ரத்னாயக்க பெயரிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அனுமதிக் கிடைத்தவுடன் புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

Related Post