Breaking
Sun. Dec 22nd, 2024

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் வைத்தியசாலைக்கு அருகில் நேற்றைய தினம் (8) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 70 பேர் உயிரிழந்தமை மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கிலேயே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள், நண்பர்கள் தொடர்பில் தாம் பிரார்த்தனை செய்வதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post