Breaking
Thu. Jan 9th, 2025

பொத்துவில் நிருபர் இர்ஸாத் ஜமால்தீன்

சவுதி அரேபியாவின் தலைமையிலான கூட்டுப்படை யெமன் நாட்டின் பெரும் நிலப்பரப்பினை ஆக்ரமிப்புச் செய்து, அங்கு கிழர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹெளதிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றது.

சவுதி அரசாங்கமானதுதமது கூட்டுப்படையில் இணைந்து கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு  அழைப்பு விடுத்த போதும், பாகிஸ்தான் தரப்பிடமிருந்துஇது வரை சாதகமான எதுவிதமான சமிஞ்சைகளும்காட்டப்படவில்லை.

இவ் விடயம் தொடர்பான கருத்துப் பரிமாற்றம் பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,  அனைத்துக் கட்சித்தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போது, தமது படையினரை அனுப்புவதை தவிர்த்து நடு நிலையை கடைபிடிப்பது என முடிவு ஒன்று எட்டப்பட்டிருந்தது.

குறித்த முடிவினை மீள் பரிசீலனை செய்து இறுதி முடிவினை மேற்கொள்ளும் வகையிலான கூட்டம் பிரதமர் நவாஸ் ஷரீப், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அன்நாட்டு முக்கியஸ்தர்களிக்கிடையில் நேற்று(11)தலைநகர் இஸ்லாமாப்பாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில்நடைபெற்றது.

இவ்விடையம் தொடர்பாக எதிர்வரும் பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டு, பாராளுமன்ற முடிவிக்கு அமைய தனது அரசாங்கம் செயற்படும் என பிரதமர் நவாஸ் ஷரீப் குறித்த கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்ட பின்னர் மிக முக்கிய தீர்க்கமான முடிவை தமது அரசு எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் பாக்கிஸ்தான் அரசு சவுதி தலைமையிலான கூட்டுப்படைல் இணைந்து கொள்ள வேண்டும் என சர்வதேச ரீதியில் பேசப்பட்டுவருகின்றது.

Related Post