Breaking
Sat. Dec 28th, 2024

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், வார்சாக் ரோட்டில் ராணுவ பப்ளிக் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்திற்குள் ராணுவ சீருடை அணிந்த, அரபி மொழி பேசிய 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள், நுழைந்து, ஈவிரக்கமின்றி அப்பாவி மாணவ, மாணவிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்கள். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில் பள்ளிக்கூடத்தில் 500 மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்தனர்.

தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் உஷார் ஆனார்கள். மாணவர்களை தரையில் படுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். பல மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் பின்புற வாயில் வழியாக வெளியேறினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள் உள்பட 141 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த சுமார் 100 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
pak-school-2-300x168இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தலிபான்கள் உடனடியாக பொறுப்பேற்றனர். இதுபற்றி அந்த இயக்கத்தின் செய்திதொடர்பாளர் கூறும்போது, தற்கொலைப்படையினர் 6 பேர் இந்த தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்தார்.

தீவிரவாதத்திற்கு எதிராக ராணுவம் நடத்தி வரும் அதிரடி தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை நடத்தினோம். எங்கள் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள், குழந்தைகளை சுட்டுத்தள்ளும் ராணுவம் எங்களது வலியை உணர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இன்றைய தாக்குதலை நடத்தினோம் என்று தலிபான் தெரிவித்துள்ளது.

பள்ளியில் தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர் என்றும் அந்தப் பள்ளி ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரும் மலர்ந்து மணம் கவழ வேண்டிய நூற்றுக்கும் மேற்பட்ட இளம்மொட்டுக்களின் உயிர்களை பறித்த தலிபான்களின் காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாக கண்டித்துள்ளன

Related Post