Breaking
Mon. Dec 23rd, 2024

மட்டக்களப்பு-பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று மாலை 03.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணம் மேற்கொண்டு கடந்த 30.08.2015 அன்று கொழுப்பு பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட 34 பௌத்த பிக்கு மாணவர்கள் பல இடங்களுக்கும் சென்று நேற்று (01.09.2015) பாசிக்குடாவிற்கு வந்து குளிக்கும் போதே தெனிகே சந்தன (வயது – 22) என்ற பௌத்த பிக்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவர் குருணாகல் கிரிவல ஸ்ரீ அரோகா ராமய விகாரையைச் சேர்ந்தவர் என்றும், கொழும்பு பல்கலைக்கழக மாணவர் என்றும் கல்குடாப் பொலிஸார் தெரிவித்தனர். மரணமடைந்தவரின் சடலம் மரண பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக கல்குடாப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post