இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்ட நாட்டிலுள்ள தமிழ் – சிங்கள அரசபாடசாலைகள் நாளை 31ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் கல்விச்செயற்பாடுகளுக்காக திறக்கப்படுகின்றன.
இப்பாடசாலைகளில் கடந்ததவணை இறுதிநாள் வரை இரண்டாம் தவணைப்பரீட்சைகள் நடைபெற்றதனால் அத்தவணைக்கான மாணவர் முன்னேற்ற அறிக்கையை வழங்கமுடியாத சூழ்நிலைக்கு பாடசாலைகள் தள்ளப்பட்டிருந்தன.
மூன்றாம் தவணைக்காக மேற்படி பாடசாலைகள் நாளை 31ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும். இதேவேளை நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் நோன்புப்பெருநாள் விடுமுறைக்காக கடந்த 06.06.2016முதல் 06.07.2016வரை மூடப்பட்டிருந்தன. கல்விச்செயற்பாடுகளுக்காக கடந்த 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டன. இரண்டாம் தவணைக்கான விடுமுறை 12.08.2016இல் விடப்பட்டு மீண்டும் மூன்றாம் தவணைக்காக 22.08.2016இல் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
க.பொ.த.உயர்தரப் பரீட்சை இடம்பெற்ற மற்றும் மதிப்பீடு இடம்பெறுகின்ற முஸ் லிம் பாடசாலைகளின் தவணைகள் விதி விலக்கானவை.