Breaking
Mon. Nov 18th, 2024

மன்னார் மாவட்ட தேசிய பாடசாலைகளுக்கான 3 மாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா, ஆசிரியர் விடுதி திறப்பு விழா மற்றும் மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு என்பன நேற்று (06) இடம்பெற்றது

கைத்தொழில் வர்த்தகம்,நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம்,கூட்டுறவு அபிவிருத்தி,தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கல்வி அமைச்சினால் மன்னார் மாவட்டத்தில் காணப்படும் 5 தேசிய பாடசாலைகளுக்குள் 3 பாடசாலைகளுக்கான புதிய மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் அல் /அஸ்ஹர் தேசியபாடசாலைக்கான ஆசிரியர் விடுதி திறப்புவிழா நிகழ்வும் முசலி தேசிய பாடசாலையில் சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது

இந்த நிகழ்வுகளின் பிரதம விருந்தினராகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாகவும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

இதன்போது உரையாற்றிய றிப்கான் பதியுதீன் ” மன்னார் மாவட்டம் கல்வி விளையாட்டு போன்ற துறைகளில் மிகவும் திறமையாகவும் முன்னிலையாகவும் காணப்படுகின்றனர் அண்மையில் கூட வெளியான க போ த (சா த) பெறுபேறு வீதங்கள் அடிப்படையில் வடமாகாணம் முதலிடம் பிடித்திருக்கின்றது யாழ் மாவட்டத்தோடு ஒப்பிடும்போது ஆசிரியர்களாகட்டும் பாடசாலை அடிப்படை வசதிகளாகட்டும் அனைத்தும் குறைவாகவே காணப்படுகின்றது இருந்தபோதும் மாணவர்கள் கல்வியில் ஆர்வத்தோடு இருக்கின்றார்கள் இவ்வாறான திறமை வாய்ந்த மாணவர்களை சிறந்தமுறையில் வழிநடாத்த வேண்டிய பொறுப்பு பாடசாலை சமூகத்தின் பொறுப்பாகும் மாறாக பாடசாலை சமூகம் அரசியல் மற்றும் இனக்கொள்கையில் பயணிக்குமானால் எதிர்கால சந்ததிகளின் கல்வி கேள்விக்குறியாகும் எனவே மாணவர்கள் எதிர்கால தலைவர்கள் ஒரு நாட்டை அல்லது ஒரு மாகாணத்தை அல்லது ஒரு மாவட்டத்தை வழிநடாத்தக்கூடியவர்களாக வர வேண்டும்

பாடசாலை என்பது ஒரு பாடப்புத்தக அறிவை மட்டும் கொடுக்கக்கூடியதாக இல்லது ஒழுக்கம் ஒற்றுமை மற்றைய சமூகத்தை மதிக்கும் தன்மை இனம் மதம் பிரதேசம் போன்ற துவேசங்களில் இருந்து நீங்கி சிறந்த சமூகமாக வளர வேண்டும் சில அரசியல்வாதிகள் கூறுவார்கள் இங்கு வருகை தந்திருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்களாக இருந்தாலும் சரி இராஜாங்க அமைச்சர் விஜயகலா அவர்களாக இருந்தாலும் சரி அமைச்சர் ரிஷாட் பதியுதீனாக இருந்தாலும் சரி அல்லது நானாக இருந்தாலும் சரி தமிழ் மொழியை பேசக்கூடிய தாயின் வயிற்றில் பிறந்து முதல் எழுத்தாக தங்கள் விரல்களால் எழுதிய எழுத்து தமிழ் மொழிதான் எனவே இந்நாட்டில் பெரும்பான்மை மக்கள் சிங்கள இனத்தவர்கள் அவர்களின் சதித்திட்டங்களுக்கு நாங்கள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சிறுபான்மை சமூகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவே இந்த மன்னார் மாவட்டத்தை முழு அபிவிருத்தி செய்து முடிக்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் முழு முயட்சியுடன் செயற்பட்டு வருகின்றார் அதேபோன்று உங்களுக்கான பாடசாலை கட்டடங்களை கல்வி அமைச்சில் இருந்து கேட்டு பெற்றுத்தந்திருக்கின்றார் இன்னும் பல வசதிகளை செய்யவும் உங்கள் கல்வி நடவடிக்கைகளை சிறந்த முறையில் கொண்டு செல்லவும் பல திட்டங்களை அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள் என்பதை கூறிக்கொள்கிறேன் ” என தெரிவித்தார்

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் மற்றும் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்

 

Related Post