Breaking
Sun. Dec 22nd, 2024

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை வழங்குவதற்காக காசோலை முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு பாடசாலை சீருடைகளை வழங்குவதற்காக வவுச்சர் முறைமை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதுவரை காலமும் இலவசமாக பாடசாலை சீருடைகளை நேரடியாக வழங்கப்பட்டு வந்தது.

எனினும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தரமான சீருடைகளை வழங்குவதற்காக வவுச்சர்களை அறிமுகம் செய்திருந்தது.

எனினும் வவுச்சர் முறையிலும் சில குளறுபடிகள் காணப்பட்டதாக பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வவுச்சர் முறைமைக்கு பதிலீடாக காசோலைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.

By

Related Post