– திலக்கரத்ண திஸாநாயக்க –
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் 32 வான்கள் மற்றும் பஸ்களின் வாகன நிறுத்தும் கருவியில் (பிரேக்) குறைப்பாடுகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 100 வாகனங்கள் இவ்வாறு வாகன நிறுத்தும் கருவிகளில் குறைபாடுகளுடன் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் அநேகமான வாகனங்கள் பாடசாலை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்கள் என்றும் இவையனைத்தும் கம்பஹா மாவட்டத்துக்குள் இயங்குபவை என்றும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கண்டறியப்பட்ட வாகனங்கள், எதிர்வரும் 14 நாட்களுக்குள் திருத்தப்பட்டு திணைக்களத்தில் ஆஜர்படுத்தப்படவேண்டும் என்றும் திணைக்களம், வாகன உரிமையாளர்களுக்கு பணித்துள்ளது.