Breaking
Sat. Nov 16th, 2024

இலங்கையில் 13 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள், புகைத்தல் பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று உலக சுகாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலை  மாணவ, மாணவிகளில் ஆயிரம் பேரில் ஒருவர் புகையிலை பாவனைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையின் பிரகாரம், 16 சதவீதமான மாணவர்களும் 5 சதவீதமான மாணவிகளும் புகையிலை பாவனைக்கு உட்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
புகைத்தல் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் 80 சதவீதமான மாணவர்கள் அறிந்திருக்கின்ற போதிலும் அவர்கள் அது தொடர்பில் கவனத்திற் கொள்வதில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.
13 முதல் 15 வயதுடைய மாணவர்களே அதிகம் இந்த பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளதால் பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பில் அம்மாணவர்களுக்கு ஆர்வமின்மை ஏற்பட்டுள்ளது.
புகையிலைப் பாவனைக்கு உட்பட்டுள்ள மாணவர்கள், அவற்றைப் பாவனைக்கு உட்படுத்திவிட்டே பாடசாலைகளுக்குச் செல்வதால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பலவீனமான தன்மைக்கு மாறியுள்ளதாகவும் உலக சுகாதார ஆய்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Post