பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பெருந்தொகை பாபுல்கள், கடந்த இரண்டு மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, கைப்பற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து இவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாபுல் தொகை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபாலவால் நேற்று பரிசீலனைக்குட்படுத்தப்பட்டது. குறித்த போதைப் பொருள் அடங்கிய பாபுல் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக, இதனையடுத்து கருத்து வெளியிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்குள் தடை செய்யப்பட்ட உணவு வகைகளை கொண்டு வருவது தொடர்பில் கடந்த சில மாதங்களாக இந்த சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டதோடு, எதிர்வரும் காலங்களில் அவற்றை வரிவாக செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.