Breaking
Mon. Dec 23rd, 2024
அதிக வெப்பம் நிலவுகின்றமையினால் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என ஆராயுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்னர் கேட்டுக்கொண்டிருந்தார்.
கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, அனர்;த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவை இணைந்து இது குறித்து ஆராய்ந்து வெளியிட்டுள்ள பரிந்துரைகளிலேயே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மற்றும் மாணவர்களுக்னெ இரு பரிந்துரைகளாக இவை வெளியிடப்பட்டுள்ளன.  மாணவர்களின் வெளிப் பாடவிதான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் வகுப்பறைகளில் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப்பட்ட நிலையில் காற்றோட்டமான சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறும், குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் பாடசாலைகளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கழுத்துப்பட்டி அணிவதைத் தவிர்க்குமாறும் தொப்பி மற்றும் குடை என்பவற்றைப் பயன்படுத்துமாறும், இனிப்பான பாணங்கள் பருகுவதைக் குறைத்து சுத்தமான குடிநீரைப் பருகுவதுடன், குடிநீர் நிரப்பப்பட்ட போத்தலை எப்போதும் உடன் வைத்திருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை நேர அட்டவணையில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் அதற்கு பதிலாக பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் முன்னரே தெரிவித்திருந்தார். tm

By

Related Post