புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் பெற்றோர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தின் இரண்டாம் மாடிக் கட்டடத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த இரண்டாம் மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த வகுப்பறைக் கட்டட நிர்மாணப்பணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக ஏழு இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.
தொடர்ச்சியாகக் காணப்பட்டு வரும் இடப்பற்றாக் குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினரால் இரண்டாம் மாடிக் வகுப்பறைக் கட்டடம் நிர்மாணிப்பதற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.