Breaking
Mon. Dec 23rd, 2024

மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவருமான என்.எம். நஸீரின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கடந்த சில வருடங்களாக குருநாகல் மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில், ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் அஸ்ஹரின் வேண்டுகோளுக்கிணங்க பாணகமுவ கிராமத்துக்கான பெரிய பள்ளி மக்தப் கட்டிட கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் உள்ளது.
இந்தக் கட்டிடத்துக்கு அமைச்சின் நிதியிலிருந்து 20,000,00.00 ரூபாய் நிதியினை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கடந்த 2018/10/04ம் திகதி முன்னால் மாகாணசபை உறுப்பினரும், சதொச பிரதித்தலைவரும், மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத் தலைவருமான என்.எம். நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் கட்சி காரியாளயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர் அஸ்ஹர் மற்றும் கொவிசங்க தலைவர் யூசுப் ஹாஜியாரும் கலந்த கொண்டு காசோலையை பெற்றுக் கொண்டனர்.
-ரிம்சி ஜலீல்-

Related Post