Breaking
Sun. Dec 22nd, 2024

பாணந்துறை கெஸல்வத்தை திக்கல வீதியில் உள்ள பூர்வராம பௌத்த விகாரையில் பொதுபலசேனாஅமைப்பின் அனுஷ்டான பூஜை நாளை ஞாயிறு பிற்பகல் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வு தொடர்பில் பாணைந்துறையில் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிகழ்வுக்கு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கலந்து கொள்ளவுள்ளதாக
தெரிவிப்படுகின்றது. முஸ்லிம்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் பொதுபலசேனாவின் நிகழ்வு நடைபெறவுள்ளதால்முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதேச முஸ்லிம்கள்  தெரிவிக்கின்றனர்.

பொதுபல சேனாவின் நிகழ்வு தொடர்பில் பாணந்துறையில் வசிக்கும்  முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு முஸ்லிம் தரப்பிடமிருந்து கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

அதே நேரம் பாணந்துறை பறத்த வீதியில் உள்ள மற்றுமொரு விகாரையில் பல் மதங்களின் பரிசளிப்பு நிகழ்வு ஒன்றும் நடைபெறவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Related Post