Breaking
Sun. Dec 22nd, 2024

பாதயாத்திரையில் பதினைந்து இலட்சம் பேர் பங்கேற்றதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் நிறைவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் கொழும்பை அடைந்த போது அதில் பதினைந்து இலட்சம் பேர் பங்கேற்றிருந்தனர்.

இந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதனையே மக்கள் ஒருமித்த குரலில் இவ்வாறு வலியுறுத்துகின்றனர்.

ஜெனீவாவிற்கு சென்று வெளிவிவகார அமைச்சர் இந்த நாட்டை காட்டிக் கொடுத்துள்ளார்.

அந்த துரோகச் செயலுக்கு எதிராகவே மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

வீதியை, பாலமொன்றை அமைக்க முடியாத இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க முடியாத அரசாங்கம் திக்கு திசை அறியாது திணறிப்போயுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

By

Related Post