அரசுக்கு எதிராக கொழும்பை நோக்கி முன்னெடுத்துள்ள எமது பாதயாத்திரையை எவராலும் தடுக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
பாரிய சவாலுக்கு மத்தியில் இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளோம். ஆனால் பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் அதனை உடைத்தெறிந்துள்ளோம்.
மக்களின் பலத்துடன் வீதிக்கு இறங்கியுள்ளோம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க மக்களின் ஆதரவை தேட இப்போது முயற்சிக்கின்றார்.
அரசாங்கம் நாட்டைப் பிளவுபடுத்தி சுயாதீன தன்மையை சர்வதேசத்திடம் ஒப்படைத்து நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளியுள்ளது.
முதலில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.