Breaking
Sat. Sep 21st, 2024
பாதாள உலகக்கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒழிப்பது பொலிஸாரின் கடமை. இதற்கு ஜனாதிபதியின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (9) இடம்பெற்ற ‘அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படு’ அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில்  பெரும் கொள்ளைகள்  இடம்பெற்றன. தற்போது, அதுபோன்றதொரு கொள்ளை இலங்கை சுங்கப்பிரிவில் இடம்பெறுகின்றது. வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் போது, சுங்கப்பிரிவில் பாரிய மோசடி இடம்பெறுகின்றது. இதனை விரைந்து தடுக்க ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதாள உலகக்கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒழிப்பது பொலிஸாரின் கடமை என்பதை சுட்டிக்காட்டிய அவர், இதற்கு ஜனாதிபதியின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸார் தமது கடமையைச் செய்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும்  அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

By

Related Post