Breaking
Mon. Dec 23rd, 2024

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை இலவசமாக வழங்குவதற்கு தயார் என்று இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைப்படி இச்சேவை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களின் வேண்டுகோள்படி உரிய டிப்போக்களின் ஊடாக போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ராமல் சிறிவர்தன கூறினார்.

இதற்கிடையில் உடரட்ட மார்க்கத்தில் ரம்புக்கனையில் இருந்து கண்டி வரை புகையிரத சேவைகள் இடம்பெறாத காரணத்தினால் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறுவதாக லங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

By

Related Post