Breaking
Mon. Dec 23rd, 2024
AppleMark

– ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி), இறக்காமம் – 

உலக வாழ்வில் பல விதமான இன்னல்களையும், மகிழ்சிகளையும் இறைவன் எமக்கு வழங்கி அதில் பல விதமான படிப்பிணைகளையும்,சோதனைகளையும் ஏற்படுத்தி எமது உள்ளங்களின் ஈமானிய தரத்தினை மதிப்Pடு செய்து பல முடிவில்லா வெகுமதிகளை வழங்குவதற்காகத்தான் நாளாந்தம் உலகின் பல பாகங்களிலும் இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தி மனித புனிதர்களின் ஈமானிய வலுவினை இறைவன் வென்றெடுக்கிறான்.

இந்தவகையில் அன்மையில் எமது இலங்கைத் தாயகத்தின் தலைநகரின் சில பகுதிகள் உற்பட பல பிரதேசங்களிலும் வெள்ளம்,மண் சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் தங்களது உயிர்கள்,உடமைகள் அனைத்தையும் இழந்து அஹதிகளாக பாடசாலைகளிலும்,வணக்கஸ் தளங்களிலும்,பொது இடங்களிலும் தங்கவைக்கப்பட்டு மக்களின் உடல்,பொருளாதார நன்கொடையின் உதவிகளோடும் ஏதோ இறைவன் மேல் தங்களது அனைத்து பொறுப்புக்களையும், நம்பிக்கைகளையும் பரம்சாட்டியவர்களாக தங்களது
நாட்களை கழித்து வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்

என்றாலும் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் மீண்டு செல்ல பல நாட்களோ,மாதங்களோ,வருடங்களோ செல்லலாம்.ஆகையால் நாம் அவர்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்வதோடு எங்களால் முடியுமான உதவிகளை குழுக் குழுக்கலாக சேகரித்து எமது பள்ளிவாயல் ஊடாகவோ அல்லது எங்களால் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தி வரும் அமைப்புக்கள் ஊடாகவோ வழங்க முன்வருவோமானால் உண்மையில் இறைவன் உதவியால் எம் தொப்புள் கொடி உறவுகளாக பாதிக்கப்பட்டிருக்கும் எம் சகோதரர்கள் ஓரளவு சந்தோசமாக வாழ உதவியாக இருக்கும்.

இன்னும் தற்போது பல இஸ்லாமிய அமைப்புக்களும் ஏனைய பௌத்த, தமிழ், கிறிஷ்தவ அமைப்புக்களும், வெளிநாட்டு உதவிகளும், அரச சார்ப்பற்ற அமைப்புக்களும் கிராமிய மக்களும் தங்களால் முடியுமான உணவுப் பொளுட்களையும், பொருளாதாரத்தையும் சேகரித்து வழங்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படியான கால கட்டத்தில் சில சுயநல வாதிகள் சில அமைப்புக்களின் தூய பணியையும், அவர்களின் சேவைகளையும் கொச்சைப்படுத்தி வாட்சப், பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களிலும் பறிமாறி வருகிறார்கள் இப்படிப்பட்ட அறிவிலிகள் இறைவைப் பயந்து கொள்ளட்டும்.

இன்னும் ‘ஓரு மனிதரை வாழதைத்தர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ (அல் குர்ஆன் 5:32) என்ற அல் குர்ஆனிய வழி காட்டலுக்கமைய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அதன் கிளைகள் இயங்கி வரும் நாடுகளான இலங்கை, பஹ்றைன், கட்டார், பிரான்ஸ், லன்டன், குவைத், றியாத், ஜித்தா, துபாய், போன்ற நாடுகளிலும் அதன் தொண்டர்களினால் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது ஆகையால் எமது உதவிகளையும் அள்ளி வழங்கி இறை திருப்தியைப் பெறுவோமாக!

இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கொலை, விபச்சாரம், இயற்கை அழிவுகள் அதிகரிப்பது யுகமுடிவின் அடையாளமாகும். எனவே இதனை ஞாபகத்தில் வைத்து எந்த நேரமும் எமக்கும் இப்படியான கொடூரம் நடைபெறலாம் என்பதனை நினைவில் வைய்த்து மரண சிந்தனையில் நல்லறன்கள் செய்வதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயரிய பாதுகாப்பு வழங்க இலங்கை அரசு கவனம் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

By

Related Post