Breaking
Mon. Dec 23rd, 2024

கொஸ்கமை சாலாவை இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட கொஸ்கம பிரதேசத்தின் பல பிரதேசங்களுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், பாதிப்புக்களை நேரடியாக கண்ணுற்றதன் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போது நிலவும் பிரச்சினைகள் அனைவற்றையும் தீர்த்து திரும்பவும் இப்பிரதேசத்தினை சாதாரண பிரதேசமாக மாற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இப் பிரதேசத்துக்கான நேரடி விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், கொஸ்கம பிரதேசத்திலுள்ள விகாரை, வைத்தியசாலை, கொஸ்கம நகரம், சாலாவ பகுதி ஆகியவற்றுக்கும் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

அங்கு விகாரையில் தங்கியிருந்த மக்களை சந்தித்த பிரதமர், அவர்களின் மீள்குடியேற்றத்துக்கான வசதிகள் மிக விரைவில் தீர்த்து வைக்கப்படுமென்றும் தெரிவித்தார். முருதகம சமூக மண்டபத்துக்கான விஜயத்தினை மேற்கொண்ட பிரதமர், அங்குள்ள மக்களது சுக நலன்களை விசாரித்து அறிந்து கொண்டதுடன், அவர்களுக்கான வசதிகள் அனைத்தினையும் பெற்றுக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் கொஸ்கம வைத்தியசாலைக்கான விஜயத்தினை மேற்கொண்ட பிரதமர், அங்குள்ள வைத்தியசாலை சேதங்களை கண்ணுற்றதும் வைத்தியசாலை மீள்புனரமைப்பு குறித்தும் அறிவுறுத்தல்களை வழங்கினார். இது தொடர்பில் மக்களிடம் கருத்து தெரிவித்த பிரதமர், அனைத்து மக்களும் சமமான அளவில் கவனிக்கப்படுவர், எவருக்கு பாரபட்சம் பார்த்து நிவாரணங்கள் வழங்கப்பட மாட்டாது. அனைவருக்கும் சாதகமான உதவிகளைச் செய்யவே இவ் அரசு எதிர்பார்த்துள்ளது எனவும் தெரிவித்தார்.

By

Related Post