சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட 159 வீடுகளின் புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், அப் பகுதியில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு கடற்படை, வான் படை மற்றும் பொலிஸாரின் உதவிகளையும் பெற்றுக் கொண்டுள்ளதாக, அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு நீர் வசதிகள் குறைபாடின்றி கிடைக்க, நீர் வழங்கள் வடிகானமைப்புச் சபையுடன் இணைந்து இராணுவம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இதன்படி அப் பகுதிகளிலுள்ள 1086 கிணறுகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களின் தேவை கருதி நீர்த் தாங்கிகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஜயநாத் ஜெயவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.