Breaking
Wed. Mar 19th, 2025

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும், தாய்நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரையும், நல்லாட்சி அரசாங்கம் கைவிடாது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை காலவரையரையின்றிக் கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவும், பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

அதுமட்டுமன்றி, உட்கட்டமைப்பு, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட சகல வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்;தை கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை நல்லாட்சி அரசாங்கம் கைவிடாது. தாய்நாட்டுப் பிரஜைகளை கைவிடாது’ என்றும் அவர் கூறினார்.

By

Related Post