நாட்டில் குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள போதிலும், பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இல்லை என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
தலைநகரம் மற்றும் தென் பகுதிகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, இந்த குற்றச்செயல்கள் தனிப்பட்ட பகைமை காரணமாகவே இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த சில வாரங்களில் இலங்கையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த மார்ச் 5ம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் காயமடைந்தார்.
எதுஎவ்வாறு இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன் அண்மைக் காலங்களில் பாதாளக் குழுக்களிடையேயான மோதல்கள் காரணமாக மூவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.