Breaking
Sat. Nov 30th, 2024

துகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நேற்று (08) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

முதலாவதாக இலங்கை தரைப்படையின் 22 ஆவது படைப்பிரிவு தலைமையகத்திற்கு சென்றதுடன் அங்கு இரானுவத்தினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் திருகோணமலை மாவட்டம் இயற்கை எழில் துறைமுகத்தை கொண்டுள்ளமையால் சர்வதேச ரீதியாக பிரபல்யம் பெற காரணமாக அமைவதுடன் வெளிநாட்டவர்களின் மனதையும் கவர்ந்துள்ளதாக அமைந்துள்ளது.

30 வருட கால யுத்தம் காரணமாக இம்மாவட்ட மக்கள் பல இன்னல்களை அநுபவித்துள்ளார்கள். இதனால் இம்மாவட்டம் உட்பட நாட்டின் அபிவிருத்தி தடைப்பட காரணமாக அமைந்தது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்கின்றார்கள்.

அதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியாகும் என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி முப்படைகளின் தளபதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

அதன் பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திருகோணமலை கடற்படைத் தலைமையகம் விமானப்படை வளாகம் ஆகியவற்றிற்கும் விஜயம் மேற்கொண்டார்.

Related Post