Breaking
Mon. Dec 23rd, 2024

புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு கட்டமைப்பில் உடனடி மாற்றங்களை செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய  பாதுகாப்பு கட்டமைப்பில் பதவியில் உள்ள இராணுவத்தளபதி, விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடத்திலேயே இந்த மாற்றத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தற்போதைய இராணுவ தளபதி ஜெனரல் தயா ரட்னாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோரை பதவியில் இருந்து விலகிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஓய்வின் பின்னரும் இருதடவைகள் பதவி நீடிப்புச் செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர ரணசிங்கவை பதவி விலகுமாறும் புதிய அரசு கோரியுள்ளது.
மேலும் விமானப்படையின் தளபதி கே.ஏ குணதிலகவுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார். எனவே எதிர்வரும் 19 ஆம் திகதி வரைக்கும் பதிவியில் இருப்பதற்கு புதிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இருப்பினும் பொலிஸ் மா அதிபர் எம்.கே இலங்கக்கோன் தொடர்ந்தும் பதவியில் இருப்பார் எனவும் புதிய அரசு அறிவித்துள்ளது.

Related Post