கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் செல்லும் பாதையை (kandy ஏ-26) திறந்து விடுவதற்கு தாம் பூரண எதிர்ப்பை தெரிவிப்பதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் கலகம ஸ்ரீ அத்தடஸ்சி தேரர் தெரிவித்தார்.
மேற்படி பாதை திறப்பு தொடர்பாக அண்மையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,
இது விடயமாக அஸ்கிரிய பீடத்தின் நிர்வாக சபையும் பௌத்த மதகுருமார் சங்கமும் (சங்க சபா) தமது எதிர்பைத் தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேற்படி பாதையை திறக்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட சில குழுவினரே முயற்சி செய்கின்றனர். இதன் மூலம் பிரிவினைவாதத்தை உருவாக்கி இலாபம் தேட முயற்சிக்கின்றனர்.
எமது அஸ்கிரிய பீட நிர்வாக சபை இதற்கு எதிர்பை வெளியிட்டுள்ள அதே நேரம் எமக்கிடையே எவ் பிரச்சினைகளும் இல்லை. எம்மை மோதவிடுவதற்கே தவறான தகவல்களை வெளியிடுவதும் உண்டு.
ஸ்ரீதலதா பெருமானுக்கு வழங்கும் மரியாதையாகவே இப்பாதையை திறந்து விடக் கூடாது எனத் கூறுகின்றோம் .
மல்வத்தை பீடம் சார்பாக கருத்து வெளியிட்ட அதன் பதிவாளர் நியங்கொட தேரர்,
பிலிமத்தலாவையிலிருந்து கண்டி வரை வாகன நெரிசல் காணப்படுவதற்கும் ஸ்ரீதலதா மாளிகாவை வீதி மூடப்பட்டமையா காரணம். சுற்றாடல் மாசடைவதாகத் தெரிவிக்கும் சூழலியளார்கள் அதற்கு ஏன் எதிர்புத் தெரிவிப்பதில்லை எனக் கேட்டார்.
யுத்தகாலத்தில் இப்பாதை மூடப்பட்ட காரணத்தால் கண்டி குயீன்ஸ் ஹோட்டல் முன்பாக இருந்து சுமார் 400 மீட்டர் செல்ல வேண்டிய தூரத்தை தற்போது வாவிக்கரையூடாக 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. அதேநேரம் இச்சுற்றுப் பாதையில் வாகனங்கள் கூடுதலான நேரம் தரித்து நிற்பதால் அதிகளவு வாகனப்புகை வெளியிடப் படுவதாகவும் அதன் காரணமாக வாயு மண்டலம் மாசடைவதாகவும் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இச்சுற்றுப் புறங்களில் மகாமாயா கல்லூரி, டி.எஸ்.சேனாநாயக்கா வித்தியாலம், ஹில்வூட் கல்லூரி, கோத்தமி பாலிகா வித்தியாலயம், தர்மராஜ கல்லூரி, மகாமாயா ஆரம்பப் பாடசாலை போன்ற பல பாடசாலைகள் இங்கு காணப்படுவதாகவும் அவற்றின் மாணவர்கள் மாசடைந்த காற்றை சுவாசிக்க நேர்வதாகவும் சூழலியலாளர்கள் அடிக்கடி சுட்டிக் காட்டுவதுண்டு என தெரிவித்தார்.