-JM.Hafeez-
கடந்த வியாழக்கிழமை (15.10.2015) கண்டி, கட்டுகாஸ்தோட்டை பிரதான வீதியில் நித்தவலை சந்தியில் மழைநீரால் அள்ளப்பட்டுச் சென்ற கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிய பாத்திமா அஸ்ராவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென அப்பிரதேச்தில் வாழும் மக்கள் இன மத பேதமின்றி பிராத்தித்து வருகின்றனர்.
இவ்வாறான ஒரு அவலம் மீண்டும் யாருக்கும் வரக் கூடாது என்று அவர்கள் இறைவனை வேண்டிக் கொண்டது மட்டும்லலாது அங்கு இயங்கி வரும் அறநெறிப்பாடசாலை மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து மெளுகுவர்தி ஏற்றி அவருக்காக தமது கண்ணீர் அஞ்சலியையும் செலுத்தினர்.
இவ்விப்த்திற்கான காரணத்தையும் அனை எவவாறு தவிர்ந்து கொள்ளலாம் என்பதையும் சுட்டிக்காட்டும் பாதாதை ஒன்றையும் அவர்கள் காட்சிப் படுத்தியுள்ளனர்.
இன, மத பேதங்களுக்கு அப்பால் மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வரும் இந்நிலையிலும் இதுவரை பாதுகாப்பற்ற அந்த இடத்தை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட எவரும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பது தொடர்பாகவும் அவர்கள் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.
அறநெறிப்பாடசாலை மாணவ மாணவிகள் விபதது நடந்த இடத்திற்குச் சென்று சுடர் ஏற்றி தமது அஞ்சலியை செலுத்தினர்.