இனி யாரும் வளைகுடா நாடுகளில் என்னை போன்று ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காக தான் இந்த பதிவு. காதல் என்ற பெயரில் ஏமாற்றி மோசடி செய்பவர்களுக்கு எதிரானது தான் இந்த பக்கம். இதில் இணைந்து ஆதரவு தாருங்கள். இது கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவனின் வலி!
மதிப்பிற்குரிய முகநூல் நண்பர்களே, இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்னென்றும் நிலவட்டுமாக,
நான் தமிழகத்தை சார்ந்தவன். அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகம் சார்ந்த தொழில்நுட்ப படிப்பை முடித்துவிட்டு வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறேன்.
அப்போதுதான், இலங்கை, கண்டி மாவட்டம், கம்பளை நகரத்தில் உள்ள பாத்திமா பெரோஜா என்கிற முஸ்லிம் பெண்ணை முதன் முதலாக 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் திகதி சந்தித்தேன்.
அவர் திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளவர். அவருடைய கணவர் மதுபழகத்திற்கு அடிமையானவர். இதனால், அவரை விவாகரத்து செய்து குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக குவைத்தில் பணிபுரிகிறேன் என்று என்னிடம் கவலையாக பேசுவார்.
இதனால், அவர் மீது நான் இரக்கப்பட்டது மட்டுமில்லாமல் ஆறுதலாகவும் பேசி வந்தேன். இதுவே, எங்களுக்குள் காதலாக மாறியது. இதை சமூகம் ஏற்றுகொள்ளுமா? இது நடைமுறைக்கு சாத்தியமா? என்பதை எல்லாம் பின்தள்ளி ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு அளிக்க முன் வந்தேன். இந்த விடயத்தில் நபிகள் நாயகமே எனக்கு முன்மாதியரியாக இருந்தார்கள். ஏனென்றால், முஹம்மது (ஸல்) அவர்கள் முதன் முதலாக திருமணம் செய்யும்போது அன்னை கதிஜா அவர்கள் கணவணை இழந்தவர்கள். அதுவும், தன்னை விட 15 ஆண்டுகள் வயதில் பெரிய பெண்ணை திருமணம் செய்தார்கள்.
அப்படிதான் என்னுடைய குடும்பம் மற்றும் உறவினர்கள் சிலரிடம் இவரை அறிமுகமும் செய்து வைத்தேன். பிறகு திருமணம் செய்ய தீர்மானித்தோம். குவைத் நாட்டில் உள்ள வெளிநாட்டு திருமணச் சட்டம் கடுமையானதாக இருந்ததாலும் ஒருசில காரணங்களாலும் எங்காளால் திருமணம் செய்ய முடியவில்லை.
2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி இலங்கை மதிப்பில் சுமார் 30 ஆயிரம் மதிப்பில் அவருக்காக அறை ஒன்றை மாத வாடகைக்கு எடுத்தேன். அன்று அல்லாஹ்வை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டோம். அப்போது அவரிடம் உனக்கு மஹராக என்ன வேண்டும் என கேட்டேன். ‘எனக்கு வேறு எதுவும் வேண்டாம். உன் அன்பு மட்டும் போதும்’ என்றார்.
அதன் பிறகு எனது பெற்றோர்களின் வார்த்தையையும் மீறி நான்கு ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். அந்த நாட்களில் அவர் எனக்கு பல பரிசு பொருட்களை வழங்கியுள்ளார். நானும் பதிலுக்கு பல அன்பளிப்புகளை வழங்கியுள்ளேன்.
எங்கள் வாழ்க்கையில் சிறுசிறு சண்டைகளும் நிகழ்ந்துள்ளது. அதை அப்படியே மறந்து குவைத் நாட்டில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் என சென்று வந்துள்ளோம். புகைப்படங்களும் எடுத்துள்ளோம்.
அவர் குழந்தையை என் குழந்தையாக நினைத்து இந்தியாவில் சென்று படிக்க வைக்கவும் முயற்சி செய்து வந்தேன். மேலும், ஒரு கணவன் மனைவிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் அனைத்தையும் மிக சரியாகவும் செய்து வந்தேன்.
இந்த நிலையில் தான் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி வியாழன் கிழமை நான் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து யாருக்கும் தெரியாமல் இலங்கை வந்துவிட்டார். இதனை அறிந்து நான் மிகவும் வேதனை பட்டேன்.
பாத்திமா பெரோஜா எனக்கு செய்த துரோகத்தையும் மறந்து அவளிடம் பேசினேன். மறுபடியும் குவைத் வருகிறேன் விசா எடு என்று கூறினார். இலங்கை மதிப்பில் சுமார் ஐம்பதாயிரம் முன் பணமாக செலுத்தி விசாவும் வந்துவிட்டது.
அதன் பிறகு எவ்வளவு முயற்சி செய்தும் அவளை என்னால் தொடர்புக் கொள்ள முடியவில்லை. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இவ்வளவு நாள் அவரிடம் வாழ்ந்த வாழ்கைக்கு எனக்கு ஒரு அர்த்தம் வேண்டும். அந்த வாழ்க்கை ஒரு விபசாரமாக மாறிவிட கூடாது என அஞ்சிகிறேன்.இதற்காக நியாயம் கேட்டு, இலங்கையை மதித்து அங்கு வரவும் தயராக உள்ளேன் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன். இதற்காக உங்களின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தருமாறு கேட்டு கொள்கிறேன்.