Breaking
Tue. Dec 3rd, 2024

பாபர் மசூதி சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் இந்து, முஸ்லிம் தலைவர்கள் இன்று (31) ஒன்றாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேலாக இந்த சர்ச்சை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பான தீர்வு காணும் வகையில் இந்து, முஸ்லிம் தலைவர்கள் இன்று ஒன்றாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அனைத்திந்திய அகாரா பரிஷத் அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகாந்த் நரேந்திர கிரி மற்றும் ஹாசிம் அன்சாரி ஆகியோர் சந்தித்தனர்.

பரிதாபாத் கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி தரப்பில் 93 வயதான ஹாசிம் அன்சாரி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு கிரி கூறியதாவது:-

பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு முடிந்த அளவிற்கு தீர்வு காண முயற்சிக்கிறோம். தீர்வு அமைதியான வழியிலும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும். அதேபோல், சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.

அன்சாரி கூறுகயில், “நாங்கள் எப்பொழுதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். இந்த பிரச்சனைக்கு கண்டிப்பாக அமைதியான வழியிலேயே தீர்வு காண வேண்டும். அதுதான் இரு தரப்பு சமுதாயத்தினரும் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

By

Related Post