Breaking
Tue. Dec 24th, 2024

வவுனியா பாரதிபுரம் கிராம மக்களை வெளியேறுமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் உத்தர விட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதும் கண்டனத்துக்குஉரியது. என வவுனியா மாவட்ட தமிழ் முஸ்லீம் அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் எம். ஜ. முத்துமொஹமட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது–

மேற்படி மக்களை வெளியேறுமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் கூறியதாக அப்பகுதி மக்கள் தன்னிடம் தெரிவித்துள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவத்தம்பி ஆனந்தன் தெரிவித்துள்ளதாக ஊடகங்களின் வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலேயே மேற்படி அறிக்கையை எம். ஜ. முத்துமொஹமட் வெளியிட்டுள்ளார்.

 இந்தச் செய்தியில் எவ்வித அடிப்படை உண்மையும் இல்லை. அமைச்சர் றிசாத்பதியுத்தீன் நேற்று பாரதிபுரத்திற்குச் சென்றது உண்மை. வன்னி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அழைப்பை ஏற்று பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகரும் வன்னி மன்னார் மாவட்டங்களுக்கு விஜயம் செய்திருந்தார். அவர் அப்பிரதேசத்தில் எவ்வித அடிப்படைவசதிகளற்று அல்லல்லுரும் மக்களை நேரடியாக அவதாணித்தார்.

 பாக்கிஸ்தான் அரசின் உதவியுடன் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லீம்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான சாத்தியமான இடங்களை பார்வையிடுவதற்காகவே இந்தப் பகுதிக்கும் இவர்கள் விஜயம் செய்திருந்தனர். அத்துடன் அங்கு குடியேறியுள்ள தமிழ் மக்களுடன் அமைச்சரும் உயர்ஸ்;தாணிகரும் மிகவும் சினேகபூர்வமாக உரையாடி அவர்களது தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இவ்வாறு உண்மை இருக்கத் தக்கதாக ஆதாரமின்றி உண்மைத்தண்மையற்ற செய்தியொன்றினை வன்னிபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருப்பது ஓர் அரசியல் நாடகமாகவே நோக்க வேண்டியுள்ளது. மட்டுமன்றி ஆண்டு ஆண்டாக இருந்துவரும் தமிழ் முஸ்லீம் உறவுக்கு இந்தச் செய்தி குந்தகத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் இப்பகுதிதமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பாரதி புரத்திற்கு வீடமைப்புத் திட்டமொன்று வருமாயின் நிச்சயமாக இரு சமுகங்களும் பாதிக்கப்படாத வகையில் குறித்த வீடுகள் பகிர்ந்தளிக்கபடுமென இந்த இடத்தில் ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றோம். எனவே தமிழ் மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்க விரும்புகின்றோம்.

 தமது அரசியல் லாபங்களுக்காக துன்பப்படும் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு எந்த நாட்டிலிருந்தாவது உதவமுன்வருமாறும் தூதுவர்களுக்கு இப்பிரதேசமக்களின் அவல நிலைகளை காண்பித்து அவர்கள் ஊடாக உதவுவதற்கே நாம்; எத்தணிக்கின்றோம். ஆகவே இவ்வகையான அபிவிருத்திகளுக்கு உதவுவதை விட்டு விட்டு உபத்திரம் செய்ய வேண்டாம். எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post