Breaking
Sun. Dec 22nd, 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வழக்கில் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் நுகேகொடை பிரதேசத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், துமிந்த சில்வாவின் தலையில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி, நீதிமன்ற நடவடிக்கைகளை தவறான திசைக்கு கொண்டு செல்ல முயற்சித்ததாக கூறப்படும் வைத்தியர் மஹேஷனி விஜேரத்ன மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கொலை சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் துமிந்த சில்வாவிற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதற்காக உத்தியோகப்பற்றற்ற வாகனமொன்றை தயார் செய்து, மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரான ஹேரத் என்பவருடன் சென்று இவ்வாறு பாதுகாப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

By

Related Post