(அப்துல்லாஹ்)
தமது கிராமத்தின் பல்வேறு பொது அலுவலங்களை மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் செய்து வருவதாக திருகோணமலை அலஸ் தோட்டம் மாதர் சங்கத் தலைவி எஸ். சாந்தா தெரிவித்தார்.
இன்று (28) வியாழக்கிழமை உப்புவெளி கிராம சேவையாளர் அலுவலகமும் அதன் சுற்றாடலும் கிராம மாதர் சங்க உறுப்பினர்களால் சிரமதானம் துப்புரவு செய்யப்பட்டது.
உப்புவெளி கிராம சேவகர் பிரிவிலடங்கும் செம்பியன் தோட்டம், சோலையடி மற்றும் அலஸ் தோட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாதர் சங்க உறுப்பினர்கள் இன்றைய சிரமதானத்தில் பங்கேற்றனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அலஸ் தோட்டம் மாதர் சங்கத் தலைவி எஸ். சாந்தாளூ,
தற்போது தொண்டுப் பணிகள் மங்கி மறைந்து எல்லாக் காரியங்களிலும் பணத்துக்காக பணிபுரிகின்ற சூழல் உருவாகியிருக்கின்றது.
இத்தகைய இயந்திரமயமான கால கட்டத்தில் மக்கள் பாரம்பரியத்தையும் தொண்டுக்காக தமது நேரத்தை அர்ப்பணிப்பதையும் மீண்டும் வழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே தாம் இந்த சிரமாதானப் பணிகளில் மாதர் சங்க உறுப்பினர்களை ஊக்குவித்து வருவதாக மாதர் சங்கத் தலைவி சிவலிங்கம் சாந்தா மேலும் தெரிவித்தார்.