Breaking
Sat. Nov 16th, 2024

2018 மார்ச் வெள்ளிக்கிழமை 30 ஆம் திகதி தினகரன் பத்திரிகையின் 21ஆம் பக்கத்தில் பிரசுரமான விளம்பரம் ஒன்று சம்பந்தமாக…

அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மான் ஆகிய என்னை சிலர் அணுகி இலங்கையில் இயங்கும் கலாநிலையம் ஒன்றை பாராளுமன்றத்தில் கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் ஒன்றை பிரேரிக்கும் படியும் அதற்கான ஆவணத்தில் கைச்சாத்திடும் படியும் வேண்டிக்கொண்டனர். சமூகத்தில் உள்ள கலா நிலையங்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற எனது நல்லெண்ணத்தில் தான் அவ்வாறு செய்தேன் .அதற்கு இணங்க பாராளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

பத்திரிகையில் அது சம்பந்தமான விளம்பரம் ஒன்று எனது பெயரில் பிரசுரிக்கப்பட்ட பின்னர் சமூக வலைத்தலங்களிலும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.எனவே உலமாக்களிற் சிலரும் சில புத்தி ஜீவிகளும் என்னுடன் தொடர்பு கொண்டு எனக்கு தெளிவு படுத்தியதன் பின்னர் நான் அவசரப்பட்டு எடுத்த பொருத்தமற்ற முடிவு அது என்பதை அறிந்து கொண்டேன். எனவே,சபாநாயகருடன் தொடர்பு கொண்டு பிரேரணையையை வாபஸ் வாங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதன் பின்னர் என்னிடம் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு ஆவணத்தையும் முன்னரை விட மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை நான் அறிந்து கொண்டேன்.இது சம்பந்தமாக என்னை தெளிவு படுத்திய உலமாக்களுக்கும்,புத்தி ஜீவிகளுக்கும்,மற்றும் ஏனைய சகோதரர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்படிக்கு,
இஷாக் ரஹ்மான்,
பாராளுமன்ற உறுப்பினர்,
அனுராதபுர மாவட்டம்.

Related Post