Breaking
Sat. Dec 28th, 2024
-NM Ameen  –
1950களில் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கண்ணியமான அரசியல் வாதிகளில் மூதூர் எம்.ஈ.எச். முஹம்மத் அலி முக்கியமானவர்.
மூதூரின் பாரம்பரிய குடும்பமான எஹ{த்தார் ஹாஜியாரின் மூத்த மகனான அல்-ஹாஜ் முஹம்மதலி 1927ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி பிறந்தார்.
கிண்ணியா அரசினர் முஸ்லிம் வித்தியாலயம், திருமலை ஹிந்துக் கல்லூரி, கொழும்பு சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்விபயின்று ய+னானி வைத்தியத்துறையிலும் கல்வி கற்றார்.
1952ஆம் ஆண்டு மூதூர் தொகுதியில் சுயேச்சை அபேட்சகராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தனது அரசியல் பிரவேசத்தை கம்ய+னிஸ்ட் கட்சி மூலமே ஆரம்பித்தார்.முதலாவது பாராளுமன்றத்துக்காக கம்ய+னிஸ்ட்கட்சி அபேட்சகராகப் போட்டியிட்டு தோல்லியடைந்தார்.
1952முதல் 1962வரை ஐந்து முறை பாராளுமன்றத்துக்கு தெரிவான மர்ஹ{ம் முஹம்மத் அலி இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலில் தமிழில் பேசிய பாராளுமன்ற உறுப்பினராவார்.
1952, 1956, 1960, 1995 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1962 ஆம் ஆண்டு மூதூர் தொகுதிக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டுத் தெரிவானார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் உறவினை வளர்ப்பதில் அக்கறை காட்டிய ஒரு தலைவராக மர்ஹ{ம் முஹம்மதலியைக் குறிப்பிடலாம். இதனால் 1962 இல் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரி அஹம்பராமின் மறைவையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் 7321 பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று இவர் தெரிவாகியது. இவர் தமிழ், முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாலமாகத் திகழ்ந்ததனை உறுதிப்படுத்தியது.
மூதூர் பிரதேசத்தின் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஆரம்ப கர்த்தாவான இவரது வேண்டுகோளின் பேரிலே ஜும்ஆத் தொழுகை நேரத்தில் பாராளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டன.
முஸ்லிம் கலாசார பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென பாராளுமன்றத்தில் அன்று தனியார் பிரேரணை ஒன்றினை நிறைவேற்றினார். தனது வாழ்நாள் காலத்தில் ஒலுவில் மர்ஹ{ம் எம்.எச்.எம்.அஷ்ரப் முயற்சியினால் தென் கிழக்கு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.
தனது பதவிக்காலங்களில் மூதூர் தொகுதி மக்களது கல்வி வளர்ச்சிக்காக பல புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய இவர் நாட்டில் பிரதான மொழியான சிங்களத்தினை தம் பிரதேச பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு சிங்கள ஆசிரியர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுத்தார்.
இலங்கையில் மாலைதீவுத் தூதுவராக 1985முதல் 1989 வரை பணிபுரிந்தார்.
இஸ்லாமியப்பற்று மிக்க இவர் மூதூரின் அபிவிருத்திக்கு பல முன்னோடி நடவடிக்கைகளை எடுத்த ஓர் அரசியல் தலைவராக இவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பின் இவரது இடத்துக்குத் தெரிவான இவரது சகோதரர் முன்னாள் மாவட்ட அமைச்சரும் பிரதி அமைச்சருமான எம். ஏ. எச். முஹ்ரூப் சுடப்பட்டு கொல்லப்பட்டமை இவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இவர் எதிர்நோக்கிய அதிர்ச்சிச் சம்வமாகும். இவரது ஒரு மகனான முபாரக் அலி நோர்வேயில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.  77 வருட வாழ்க்கையின் பின் 2004.12.31 ஆம் திகதி இறைவனடி எய்தினார்.
அன்னாரது பாவங்களை மறைத்து உயர்வான சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போமாக!

Related Post