Breaking
Sun. Dec 22nd, 2024

தென்னாபிரிக்கா அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை சரத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கையின் பாராளுமன்ற குழுவொன்று தென்னாபிரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.

பாராளுமன்ற உப குழுவின் உறுப்பினர்களான ஏ.அரவிந்தகுமார், எஸ்.சிறிதரன் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, வைத்திய கலாநிதி  துசித்த விஜயமான்ன, அதுரலியே ரத்தினத்தேரர் மற்றும் சல்மான் ஆகியோரே இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படவுள்ள நிலையில், அடிப்படை உரிமைகளை சரியான முறையில் அமுல்படுத்தும் நோக்கத்திலேயே குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குழு தென்னாபிரிக்காவின் சட்ட மா அதிபர், நீதியரசர்கள் ஆகியோரை சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post