Breaking
Thu. Dec 26th, 2024

கம்பரெலிய வேலைத்திட்டத்தின் கீழ் Holly Cross தேவாலயம், Holly Cross வித்தியாலயம் மற்றும் வீதி புனரமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு சம்மந்தமான கலந்துரையாடல் நேற்று கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி SMM. இஸ்மாயில் அவர்களின் தலமையின் கீழ் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது
இப்பிரதேசத்தில் அபிவிருத்தி சார்ந்த வேலைகளை செய்ய தயாராக உள்ளதாகவும் இதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் என பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் பேசப்பட்டது.

இவற்றை அடிப்படையாக கொண்டு கம்பரெலிய நிதி ஒதுக்கீடில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு கீழுள்ள வறிய மக்களின் நலன் கருதி இலவச மின் இணைப்பு வசதிகளும், வீடு புனர்நிர்மானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்ட விடயம் சம்மந்தமாகவும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

Related Post